மேத்தி சிக்கன் மசாலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - ஒரு கிலோ

வெங்காயம் - கால் கிலோ

தக்காளி - கால் கிலோ

பச்சை மிளகாய் - இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை மேசைக்கரண்டி

கொத்தமல்லி - - கால் கட்டு

வெந்தய கீரை - ஒரு கட்டு

மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி

இரண்டு அங்குல துண்டு பட்டை - ஒன்று

எண்ணெய் - மூன்று மேசைக்கரண்டி

நெய் (அ) டால்டா - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக போட்டு தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.

ஒரு வாயகன்ற சட்டியை காய வைத்து எண்ணெய் + நெய் (அ) டால்டாவை ஊற்றி பட்டையை போட்டு வெடித்ததும் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு கொத்தமல்லி தழை போட்டு கோழியை போட்டு எண்ணெயில் நன்கு கிளற வேண்டும். தக்காளியை அரைத்து ஊற்ற வேண்டும்.

பிறகு மிளகாய் தூள், உப்பு, பச்சை மிளகாய் ஒடித்து போட்டு சிறிது நேரம் தீயை சிம்மில் வைத்து கோழியை வேக விட வேண்டும்.

பிறகு வெந்தய கீரையை மண் இல்லாமல் ஆய்ந்து அலசி தண்ணீரை வடிக்கட்டி சேர்க்க வேண்டும். தீயை சிம்மில் வைத்து நன்கு வெந்ததும் இறக்கவேண்டும். இது நல்ல கூட்டு போல் வரும்.

குறிப்புகள்: