மெக்ஸிகன் சிக்கன் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - அரைக்கிலோ

மிளகாய்தூள் - ஒருகரண்டி

மிளகுத்தூள் - ஒருகரண்டி

வார்செஸ்டர்சயர் சாஸ் - மூன்று கரண்டி

எலும்பிச்சைப்பழம் - ஒன்று

தக்காளிசாஸ் - ஒரு கோப்பை

பூண்டு - பத்து பல்

எண்ணெய் - ஐந்து கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழிக்கறியினை சுத்தம் செய்து எலும்புகளை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக வெட்டவும்.

கறியுடன் உப்பு, மிளகாய்தூள், மிளகுத்தூள், வார்செஸ்டர்சயர் சாஸ், எலுமிச்சைச்சாறு சேர்த்து பிரட்டி குறைந்தது ஒருமணி நேரம் வைக்கவும்.

ஒரு தவாவில் எண்ணெய் விட்டு கோழியை போட்டு பாதி வேக விடவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு நன்கு வேகவிடவும். கடைசியில் தக்காளி சாஸ் ஊற்றி கலக்கி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: