முட்டை பூந்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

தேங்காய்ப்பால் அல்லது பசும்பால் - 1 கப்

சர்க்கரை - தேவைக்கு

உப்பு - பின்ச்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி, கிஸ்மிஸ் - கொஞ்சம்

செய்முறை:

முட்டை, பால், சர்க்கரை, பின்ச் உப்பு சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.

நாண்ஸ்டிக் தவாவில் நெய், முந்திரி கிஸ்மிஸ் வறுத்து அதில் முட்டை கலவையை விட்டு உதிர்த்து பிரட்டிக்கொண்டு வரவும். பூந்தி போல் உருண்டு வரும். சாஃப்டாக இருக்கும். இறக்கிவிடவும். விருப்பப்பட்டால் ஏலக்காய் தூள் பின்ச் சேர்க்கலாம்.

சுவையான முட்டைப்பூந்தி ரெடி.

குறிப்புகள்: