முட்டை கொத்சு
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
தக்காளி - ஒன்று
மிளகுத்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - 3 சிட்டிகை
எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நைசாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடானவுடன் எண்ணெய் ஊற்றி, நறுக்கியவைகளை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு முட்டையை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி அதில் ஊற்றி முக்கால் வேகாடாக இருக்கும்போதே இறக்கிவிடவும்.
இது ஆப்பத்திற்கு சுவையான ஒரு தொட்டுக்கறி.