முட்டை குதும்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - நான்கு

வெங்காயம் - ஆறு

தக்காளி - இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

பச்சைமிளகாய் - மூன்று

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - நான்கு தேக்கரண்டி

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

டால்டா - அரை தேக்கரண்டி

பட்டை - ஒன்று

செய்முறை:

வாணலியில் எண்ணெயை காய வைத்து டால்டா சேர்த்து பட்டையை போட்டு வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக அரிந்து அதில் போட்டு நல்ல வதக்கி பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டையும் போட்டு வதக்கவும்.

பிறகு தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி முட்டையை நல்லா அடித்து அதில் கலக்கி சிறிது கொத்தமல்லி தழை போட்டு மூடி போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

தோசை திருப்புவது போல் திருப்பி மறுபடியும் சிம்மில் வேக விடவும்.

வெந்ததும் நல்ல கிளறி மீதி உள்ள மொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

குறிப்புகள்: