மீன் மஞ்சூரியன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2கிலோ

முட்டை- 1

கான்பிளவர்- 2தே.கரண்டி

மைதா- 2தே.கரண்டி

மிளகுத்தூள்- 3ஸ்பூன்

வினிகர்- 1 தே.கரண்டி

சோயாசாஸ்- 1ஸ்பூன்

நறுக்கிய இஞ்சி பூண்டு- 1ஸ்பூன்

வத்தல்- 3

உப்பு, எண்ணெய்- தேவைக்கு

செய்முறை:

சுத்தபடுத்தி துண்டுகளாக நறுக்கிய மீனுடன், உப்பு, மிளகுத்தூள், கான்பிளவர், மைதா போட்டு விரவி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மீன்னை பொறித்து எடுக்கவும்.

கடாயில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வத்தல் போட்டு வதக்கவும்.

பின் சோயாசாஸ் ஊற்றி 1/2கப் தண்ணீர் விட்டு சூடாகிய பின்பு வினிகர் உப்பு மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு பொறித்த மீன்னை போட்டு அதிகம் பிரட்டாமல் இறக்கவும்.

குறிப்புகள்: