மீன் தந்தூரி BBQ

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாறை மீன் பெரியதாக - 4

மிளகாய்தூள் - 2 கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு கரண்டி

அரைக்கவும்:

பச்சைமிளகாய் - 50 கிராம்

பூண்டு - 10 பல்

மிளகு - 2 தேக்கரண்டி

மல்லி, புதினா - தலா ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

வினிகர் - 4 கரண்டி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீறி வைக்கவும்.

அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும்.

மீனில் அரைத்த மசாலா தூள்கள், வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்.

பின் க்ரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும்.

அவனை 280° சூடாகி அதில் மீனை வைக்கவும்.

பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும். மீன் தண்ணீர் விடும் எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை வைத்திருந்து எடுத்து சூடாக பரிமாறவும்.

வெங்காய சட்னி அல்லது ஆப்சலாவுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: