மீன் கட்லட் 1
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் மீன் (அ) முள் இல்லாத மீன் - அரை கிலோ
உப்பு - தேவைக்கு
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
முட்டை வெள்ளை கரு - மூன்று
கார்ன் ஃப்ளேக்ஸ் (அ) க்ரெம்ஸ் பவுடர் - மீனில் முக்க தேவையான அளவு
மைதா - ஒரு தேக்கரன்டி
செய்முறை:
மீனை சுத்தம் செய்து முள் எடுத்து விடவும்.
எலுமிச்சை சாறில் (அ) மஞ்சள் (அ) வினிகரில் ஊற வைத்து கழுவவும்.
மேலே குறிப்பிட்டுள்ள மசாலாகளை கெட்டியாக பிசைந்து மீனில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
முட்டையின் வெள்ளை கருவை நல்ல நுரை பொங்க அடித்து அதில் ஊறிய மீனை இரு பக்கமும் தோய்த்து க்ரம்ஸ் பவுடர் (அ) கார்ன் ப்ளேக்ஸை பவுடராக்கி அதில் மைதாவை கலந்து இரு பக்கமும் தோய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து டீப் ஃப்ரை செய்யவும்.