மிட்டாகானா
தேவையான பொருட்கள்:
அரிசி - கால் கிலோ (நல்ல தரமான வாசனை பாசுமதி அரிசி)
சர்க்கரை - அரை கிலோ
இனிப்பில்லாத பால் கோவா - ஐம்பது கிராம்
டால்டா - ஐம்பது கிராம்
முந்திரி - ஐம்பது கிராம்
கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
பட்டை - ஒரு சிறிய துண்டு
மஞ்சள் கலர் பொடி - ஒரு பின்ச்
உப்பு - ஒரு பின்ச்
நெய் - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் அரிசியை களைந்து ஊற வைக்கவும். உலயை கொதிக்க வைத்து அதில் ஒரு பின்ச் உப்பும், மஞ்சள் கலர் பொடியும் போட்டு ஊற வைத்த அரிசியை போட்டு முக்கால் பதத்தில் வடித்து எடுத்து தனியாக வைக்கவும்.
டால்டாவை காய வைத்து பட்டையை போட்டு வடித்த சாதத்தை போட்டு ஒரு கிளறு கிளறி, சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கிளறி பால் கோவவையும் சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும்.
சர்க்கரை, பால் கோவா இறுகி வரும் போது இறக்கி நெய்யில் முந்திரி, சாரப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தையும் வறுத்து போட்டு இறக்கி உடனே ஆற வைக்கவும்.
பிறகு எடுத்து பரிமாறவும்