மாசி துவையல்
0
தேவையான பொருட்கள்:
மாசி - இரண்டு மேசைக்கரண்டி
தேங்காய் - நான்கு பத்தை
வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - மூன்று
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் காய்ந்த மிளகாய் காம்பை பிடித்து அடுப்பில் லேசாக சுட்டுக் கொள்ளவும், அதை மிக்ஸியில் திரித்து பிறகு அதோடு மாசியை போட்டு திரிக்கவும், தேங்காய், உப்பு சேர்த்து நல்ல அரைத்து கடைசியில் வெங்காயம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.