மாங்காய் பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 1

மிளகாய்தூள் - ஒரு கரண்டி

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - ஒரு கரண்டி

சீனி - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - மூன்று கரண்டி

செய்முறை:

மாங்காயை துண்டுகள் போடவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சீரகத்தூள், மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு பொரியவிட்டு மாங்காயை போட்டு கிளறி ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.

தேவையென்றால் இன்னும் சிறிது தண்ணீர் ஊற்றி வெந்து எல்லாம் திரண்டால் போல் வந்ததும் சீனியை போட்டு கிளறி அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: