மட்டன் பக்கோடா

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் - 7or8 சின்ன துண்டுகள்

வெங்காயம்- 1/2

இஞ்சி பூண்டு - 1/2tsp

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

ரெடிமேட் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய்- பொரிப்பதற்கு

செய்முறை:

குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தாளிக்கவும்.

பிறகு இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி மட்டன்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி,1 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4or5 விசில் விடவும்.

கறிவெந்தவுடன்.தண்ணீரை வடிகட்டி தனியே வைத்துக்கொள்ளவும்.

பிறகு மட்டன் கலவையில் பஜ்ஜி போண்டா மிக்ஸ் கொஞ்சம் சேர்த்து பிசறிக்கொள்ளவும்.தேவையென்றால் மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம்.

மட்டன் கலவை நன்கு கறியுடன் சேர்ந்து இருக்கவேண்டும்.

எண்ணேய் பொரிப்பதற்கு காயவைத்து பொரித்து எடுக்கவும்.

சுவையான மட்டன் பக்கோடா ரெடி.

குறிப்புகள்: