மட்டன் சாப்ஸ்
0
தேவையான பொருட்கள்:
கறி - அரை கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
செய்முறை:
கறியை(எலும்பு கறி) நன்றாக கழுவி அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு தூள், தனியாதூள் சேர்க்கவும்.
பச்சை மிளகாயை கால் கப் தண்ணீர் சேர்த்து அரைத்து ஊற்றவும்.
மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விட்டு தண்ணீரை வற்ற விடவும்.
ஒரு இரும்பு தோசை கல் அல்லது தவ்வா அல்லது நாண் ஸ்டிக் தோசை தவ்வாவில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா தூள் தூவி கருவேப்பிலை சிறிது சேர்த்து கறியை போட்டு நல்ல சிவக்க வருத்தெடுத்து பரிமாறவும். இதற்கு எண்ணெய் அவ்வளவாக தேவையில்லை.