ப்ரான் இன் ஸ்பிரிங் ஆனியன்
தேவையான பொருட்கள்:
இறால் - பத்து
வெங்காய தாள்(ஸ்பிரிங் ஆனியன்) - ஒரு கட்டு
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - கொஞ்சம்
தக்காளி (அரைத்தது) - ஒன்று
உப்பு - தேவைக்கு
மிளகாய் தூள் (அ) மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
துருவிய கேரட் - ஒரு மேசைக்கரண்டி
துருவிய கேபேஜ் - ஒரு மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
இறாலை சுத்தப்படுத்தி அழுக்குகளை எடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் பொடி, உப்பு, எண்ணெய் ஒரு தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பாதியை போட்டு ஊற வைக்கவும்.
ஆலிவ் ஆயிலை சூடுப்படுத்தி வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு போட்டு நல்ல வதக்கவும்.
பிறகு ஊறிய இறாலை சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காய தாள் பொடியாக நறுக்கி போட்டு கேபேஜ், கேரட் சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். தக்காளிக்கு பதில் டொமேட்டோ பேஸ்டும் சேர்க்கலாம்.