ப்ரஷ் ப்ரூட் கஸ்ட்டர்ட்
தேவையான பொருட்கள்:
கஸ்ட்டர்ட் பவுடர் (வெண்ணிலா ப்ளேவர்) - 3 மேசை கரண்டி
பால் - 1/2 லிட்டர்
சப்ஜா விதை - 5 கிராம்
சீனி - 1/2 கப் (சுவைக்கு தகுந்தபடி மாற்றலாம்)
திராச்சை - 16
ஆப்பிள் - 1
வாழை - 2
மாதுளை - 1
முந்திரி,பாதம் - 10
செய்முறை:
சப்ஜா விதையை 6 மணி நேரத்திற்கு முன்பே ஊற வைக்கவும். ஆப்பிள்,வாழை பழங்களை நறுக்கிக்கொள்ளவும்.
மாதுளையை தோல் உரித்து உதிர்த்துக்கொள்ளவும். முந்திரி, பாதாமை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
பாலில் தண்ணீர் சேர்க்காமல் சீனி சேர்த்து கொஞ்சம் சுண்ட காய்ச்சவும்.
கஸ்ட்டர்ட் பவுடரில் சிறிது குளிர்ந்த நீரை ஊற்றி கரைத்து பாலில் சேர்த்து சிறிது நேரம் அடிபிடிக்காவண்ணம் காய்ச்சவும்.
கொஞ்சம் கொழகொழப்பானது (கூல் பதத்திற்கு வந்த பின்னர்) இறக்கி ஆறவிடவும்.
நன்கு ஆறிய பின் ப்ரீசரில் ஐஸ் கட்டியாக ஆகும் வரை வைக்கவும்.
பின்னர் எடுத்து மிக்ஸியில் நுரை பொங்க அடிக்கவும். பின் பழங்கள், சப்ஜா விதை, முந்திரி,பாதம் சேர்த்து கிளறி ப்ரிட்ஜில் வைக்கலாம். தேவைப்படும் போது எடுத்து சாப்பிடலாம்.