பைனாப்பிள் பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அன்னாசி பழம் - 1

சீனி - 1 கப்

லெமன் கலர் - 1 சிட்டிகை

நெய் - 1 ஸ்பூன்

பட்டை,ஏலக்காய் - சிறிது

முந்திரி - 10

திராச்சை - 15

உப்பு - 1சிட்டிகை

செய்முறை:

அன்னாசியை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.

ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பட்டை,ஏலக்காய்,முந்திரி,திராச்சை போட்டு பொன்னிறமாக வருக்கவும்.

அதில் அன்னாசியை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

வேகும் போது அதில் லெமன் கலர், உப்பை போடவும்.

பழம் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் சீனியை போட்டு அடுப்பை சிறு தீயில் வைக்கவும்.

சீனி பாகு போல் ஆகியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஆறியதும் பரிமாரவும்.

குறிப்புகள்: