பேரீச்சம் பழ பச்சடி
தேவையான பொருட்கள்:
பேரீச்சம்பழம் - 250 கிராம்
வினிகர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறியதுண்டு
மிளகாய்தூள் - 2 கரண்டி
புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு
மஞ்சள்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
முழுமிளகு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் நெய் கலந்து - 5 கரண்டி
கடுகு - 1 டேபிள்ஸ்பூன்
சீனி - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பேரீச்சம் பழத்தை விதையை எடுத்து விட்டு சிறியதாக பிய்த்து வினிகரில் அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
இஞ்சி பூண்டை பொடியாக நறுக்கவும். புளியை இரண்டு முறை கரைத்து வைக்கவும்.
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து கடுகு போட்டு வெடித்ததும் மிளகைப்போட்டு பொரிந்ததும் நறுக்கி வைத்த இஞ்சி பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.
பின் அரைத்த இஞ்சி பூண்டு விழுது போட்டு மிளகாய்தூள், மஞ்சள்தூள் போட்டு ஊற வைத்த பழத்தை கையால் ஒரு பிசை பிசைந்து அதில் ஊற்றி நன்கு கலக்கவும்.
அதில் கரைத்து வைத்த புளியை ஊற்றி புளிப்புக்கு தகுந்தாற்போல் உப்பு போட்டு கொதிக்க விடவும்.
பழம் வெந்து மேலே எண்ணெய் திரண்டு வரும் போது சீனியை போட்டு அடுப்பை அணைக்கவும்.