பெருநாள் பராசாப்பம்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - ஒரு படி(கொர கொரப்பானது)

தேங்காய் - பெரியது ஒன்று (முதல் தேங்காய் பால் எடுக்க)

முட்டை - 8

பொட்டுக்கடலை - கால் கப்

பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - ஒன்று(பெரியது)

கரூர் நெய் (அ) டால்டா - 100 மில்லி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

சமையல் சோடா - அரை தேக்கரண்டி

செய்முறை:

அரிசி மாவில் பொட்டுக்கடலை, பெருஞ்சீரகம் இரண்டையும் பொடி செய்து சேர்த்து, பின்பு முட்டை, உப்பு, சமையல் சோடா மற்றும் தேங்காய் பால் ஊற்றி நன்கு ஒன்று சேர இட்லி மாவைவிட சற்று கெட்டியாகக் கலக்கிக் கொள்ளவும். அதை 4 மணி நேரம் புளிக்க விடவும்.

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

புளித்திருக்கும் மாவில் வெங்காயத்தையும், நெய்யையும் ஊற்றி நன்கு கலக்கி பத்து நிமிடம் வைக்கவும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு சூடு வந்ததும், ஒரு கரண்டி நிறைய மாவு எடுத்து ஊற்றி, மூடிபோட்டு தீயை குறைத்து வைத்து வேக விடவும்

சிவந்ததும் திருப்பிப் போட்டு மறுபக்கமும் சிவக்க விட்டு எடுக்கவும்.

சுவையான பெருநாள் பராசாப்பம் தயார். இது இஸ்லாமிய இல்லங்களில் பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்.

குறிப்புகள்: