பெப்பர் சிக்கன் கிரேவி
2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சிக்கன்-1/2 கிலோ
மிளகு-1 ஸ்பூன்
வெங்காயம்-2
தக்காளி-3
இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
பட்டை-1
ஏலக்காய்-2
கிராம்பு-3
அன்னாசி பூ-1
பட்ட மிளகாய்-2
எண்ணெய்-1 மேசை கரண்டி
செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து தயாராக வைக்கவும்
மிளகை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்யவும் (அம்மியில் தட்டியது போல)
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்க்கவும்
பின்னர் பட்ட மிளகாய்,வெங்காயம் சேர்த்து நன்கு பொரிய விடவும்.
அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பின் தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்
பின் கோழியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து குக்கரை மூடி விடவும். (தண்ணீர் சேர்க்க தேவையில்லை)
2 விசில் வந்ததும் இறக்கி மிளகை சேர்த்து (அதில் இருக்கும் தண்ணீர் வற்ற) கிளறி இறக்கவும்