பூண்டு கோழி 2 (கேஸ் பிராப்ளத்திற்கு)
தேவையான பொருட்கள்:
கோழி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 25 பல்
இஞ்சி - 25 கிராம்
எண்ணெய் - 150 கிராம்
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியை சுத்தமாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக போட்டு கொள்ளவும்.
இஞ்சி, பெரிய வெங்காயத்தை தனித்தனியாக அரைத்து கொள்ளவேண்டும்.
பூண்டையும், சின்ன வெங்காயத்தையும் வட்ட வடிவமாக பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெயை காய வைத்து அதில் பூண்டையும் சின்ன வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயம், இஞ்சியை போட்டு வதக்க வேன்டும்.
நன்கு சிவந்ததும் கோழியை போட்டு வதக்கி சிம்மில் சிறிது நேரம் வைக்கவும்.
கோழி வெந்து வரும் போது மிளகு தூள், சோம்பு தூள், உப்பு போட்டு நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மசாலா வாசனை அடங்கும் வரை விட்டு கிளறி கடைசியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.