பூசணிக்காய் கருவாடு பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மஞ்சள் பூசணிக்காய் - 1/2 கிலோ

வஞ்சிரம் கருவாடு - 2 துண்டுகள்

வெங்காயம் - 2

வற்றல் மிளகாய் - 5

மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்

சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்

கெட்டியான புளி விழுது - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 ஸ்பூன்

உப்பு - 1/4 ஸ்பூன்( தேவைப்பட்டால் )

செய்முறை:

பூசணிக்காயை சதுரத்துண்டுகளாய் நறுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

கருவாட்டை நன்கு கழுவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளிய மிளகாய் வற்றல் போடவும்.

வெங்காயத்தை சேர்க்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் கருவாட்டை சேர்த்து கிளறவும்.

கருவாடு பச்சைவாடை போக வதக்கவும்.

பின் அதில் பூசணிக்காய் சேர்த்து கிளறவும்.

சீரகத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து பிரட்டவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும்.

வெந்ததும் புளிவிழுது சேர்த்து கிளறவும்.

தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

குறிப்புகள்: