புளிச்சாறு (ரசம்)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புளி - சிறிய எலுமிச்சை அளவு.

தக்காளி சிறியது - 1

மிளகாய் - 1

வெங்காயம் சிறியது - 1

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்

வெந்தயம் - கால் ஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - கொஞ்சம்.

செய்முறை:

புளியை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற புளிப்புச்சுவையுடன் உப்பு போட்டு கரைத்துக்கொள்ளவும்.

மிக்ஸியில் மிளகு, சீரகம் பொடித்து அதனுடன் பாதி வெங்காயம், பூண்டு 3 பல், தக்காளி, மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி காம்பு கொஞ்சம், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், கடுகு கால் ஸ்பூன் போட்டு ஒரு சுத்து சுத்தி எடுக்கவும். கடுகு சுத்துவதால் ரசத்தில் தேங்காய் பூ போல் மிதக்கும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வெங்காயம், கறிவேப்பில்லை தாளித்து, மிக்ஸியில் உள்ளதை போட்டு வதக்கவும் சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்.

பின்பு புளிக்கரைசலை விடவும், நுரை கூடி வரும் போது அடுப்பை அணைக்கவும்.

கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: