புதினா டீ (மயக்கத்திற்கு)
0
தேவையான பொருட்கள்:
பால் - இரண்டு டம்ளர்
தண்ணீர் - இரண்டு டம்ளர்
சர்க்கரை - ஆறு டீஸ்பூன்
டீ தூள் - இரண்டு தேக்கரண்டி
புதினா - ஒரு கைப்பிடி
செய்முறை:
பால், தண்ணீர், சர்க்கரை மூன்றையும் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் டீ தூள் மற்றும் புதினாவை போட்டு கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விட்டு மூடி போடவும்.
இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி குடிக்கவும்.