பீட்ரூட் பச்சடி
0
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - கால் கிலோ
கரூர் நெய் - 50 மில்லி
பசு நெய் - ஒரு ஸ்பூன்
சீனி - கால் கிலோ
முந்திரி பருப்பு - 10
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பீட்ரூட்டை தோலோடு வேகவைத்து, நன்றாக வெந்தவுடன் தோலை சுரண்டி பொடியாக துருவிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியில் கரூர் நெய் விட்டு துருவிய பீட்ரூட்டை போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பச்சை வாடை மாறும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கியவுடன் சீனியையும் முந்திரிப் பருப்பையும் கொட்டி மீண்டும் வதக்க வேண்டும்.
கடைசியாக பசு நெய் ஒரு ஸ்பூன் விட்டு லேசாக ஒரு முறை வதக்கி இறக்கி விடவேண்டும். இது பிரியாணி மற்றும் கறி சால்னாவுக்கு நன்றாக இருக்கும்.