பிரட் கொத்சு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரட் - 8 ஸ்லைஸ்

முட்டை - 2

மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 5 கரண்டி

உப்பு - ஒரு கரண்டி

சின்னதாக வெட்டவும்:

உருளைக்கிழங்கு - ஒன்று

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

பச்சை குடைமிளகாய் - ஒன்று

செய்முறை:

பிரட்டை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பிரட்டை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்(வெறும் வாணலியில்).

அதை ஒரு தட்டில் கொட்டிக்கொண்டு அதே சட்டியில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை போட்டு பொரிய விடவும்.

ஜந்து நிமிடம் கழித்து குடைமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் போட்டு இரண்டு நிமிடம் கிளறி அதில் தூள்களையும் போட்டு முட்டையை அதில் ஊற்றி கலக்கி நன்கு பொரியவிடவும்.

பின் இரண்டு நிமிடம் கழித்து பிரட்டை போட்டு நன்கு கிளறி எல்லாப்பக்கமும் சேர்ந்தால் போல் கலக்கி அடுப்பை அணைக்கவும்.

குறிப்புகள்: