பிட்சா ப்ரெட் (குழந்தைகளுக்கு) 1
தேவையான பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - பத்து
துருவிய கேரட், கேபேஜ், பீன்ஸ் - அரை கப்
வெங்காயம் - கால்
பூன்டு - ஒன்று
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கர்ண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
துருவிய சீஸ் (மொஜொரெல்லா) - அரை கப்
டொமேடோ சாஸ் (அ) பிட்சா சாஸ் - ஐந்து மேசைக்கரண்டி
சர்க்கரை - ஒரு பின்ச்
துருவிய காப்சிகம் - ஒரு மேசைக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு டிராப்
பட்டர் - ப்ரெட் பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் ப்ரெட்டை பட்டர் இரு பக்கமும் தடவி லேசான சிவப்பு நிறமாக பொரித்து வைக்கவும்.
கொஞ்சமாக பட்டர் போட்டு சர்க்கரை ஒரு பின்ச், பூன்டு, வெங்காயம் சேர்த்து பொடியாக நறுக்கிய அனைத்து காய்களையும் போட்டு லேசாக சோயா சாஸ், உப்பு, வெள்ளை மிளகு தூள் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.
இப்போது ப்ரெட்டில் இரண்டு சைடும் சாஸை தடவி விட்டு வதக்கிய கலவையை பரவினாற் போல வைத்து மேலே ஒரு மேசைக்கரண்டி அளவு சீஸ் துருவலை பரவினாற் போல வைத்து மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடவும். மூடி நல்ல அழுத்தி மைக்ரோவேவில் 10 செகண்ட் வைத்து எடுத்து அப்படியே பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம்.