பாலாடை

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 1 கப்

தேங்காய் பால் - 1 கப்

முட்டை - 2

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

.அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் பாலை விட்டு நைசாக அரைக்கவும்.

மாவு வெண்ணெய் போல அரைந்ததும் முட்டையையும் ஊற்றி 2 நிமிடம் அரைத்து எடுத்து விடவும்.உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.

தே.பால் கட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேனை வைத்து சூடானதும் ஒருகரண்டி மாவை ஊற்றி கொண்டே ஒரு கையினால் பேனின் ஹான்டிலை பிடித்து சுழற்ற வேன்டும். ஆப்பத்திற்க்கு சுழற்றுவது போல் வீசி சுழற்ற வேண்டும்.( மாவை ஊற்றிய உடனே சுழற்றிவிடவேண்டும். இல்லவிட்டால் மாவு ஒரு இடத்திலே கட்டியாக நின்று விடும்.)

பாலாடை ஒரு நொடியில் தயாராகிவிடும்.ஓரங்களில் இளகி வரும் போது கையினாலே எடுத்து விடலாம்.

இதே முறையில் எல்லா மாவிலும் பாலாடை தயாரித்து, சற்று ஆறியதும் அடுக்கி வைக்கவும்.

இதற்கு மட்டன் சிக்கன் குழம்பு நன்றாக இருக்கும்.

இனிப்பு பாலாடை தேவையென்றால், அரை கப் அவலை கழுவி,அரைகப் தேங்காய் துருவல்,கால் கப் சீனி ஆகியவற்றை மிக்ஸ் செய்து, ஒரு பாலாடயை எடுத்து அதன் ஓரத்தில் ஒரு கரண்டி அவல் கலவையை வைத்து சுருட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது சுருட்டு பாலாடை

குறிப்புகள்: