பாகற்காய் கேரட் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - கால் கிலோ

கேரட் - கால் கிலோ

நெத்திலி கருவாடு - இரண்டு கரண்டி

இறால் - 10 (அ) 15

சின்னவெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - மூன்று

மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - மூன்று கரண்டி

தேங்காய்துருவல் - ஒரு மூடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை விதையை நீக்கி வட்டமாக அரிந்துக் கொள்ளவும். கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கேரட் பாகற்காயை தனித்தனியாக வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியை வைத்து இறால், கருவாடுடன் மிளகாய்தூளைப் போட்டு சிறிது பொரிய விடவும்.

அதனுடன் வேகவைத்த காய்களைப் போட்டு தேங்காய் துருவல் தவிர அனைத்தையும் சேர்த்துக் கிளறவும். தண்ணீர் எல்லாம் சுண்டியவுடன் தேங்காய்துருவலை சேர்த்து வதக்கி இறக்கவும்.

குறிப்புகள்: