பலாப்பழ போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

பலாப் பழம் -15

வாழைப் பழம் -2

தேங்காய் பால் - 1/2 கப்

ரவை - 1/4 கப்

உளுந்து -1/4 கப்

சீனி -1/4 கப் (தேவைக்கு தகுந்தபடி அதிகப்படுத்தலாம்.)

ஏலக்காய் -3 (தட்டியது)

உப்பு -தேவைக்கு

சோடா உப்பு -சிறிதளவு

எண்ணெய் -பொரிப்பதற்கு

செய்முறை:

ரவையை தண்ணீர் சிறிதளவு ஊற்றி 1/2 மணி நேரம் ஊற விடவும். உளுந்தையும் 1/2 மணி நேரம் ஊறவிட்டு நைஸாக அரைக்கவும்.

பலா பழ கொட்டையை நீக்கி,வாழை பழத்துடன் கையால் பிசையவும். அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று மட்டும் விட்டு எடுக்கவும்.

பின் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து பிசையவும். தேவைபட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம். 4 மணி நேரம் ஊறவிட்டு பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: