பலாச்சுளைப் பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பலாச்சுளை - 1/4 கிலோ

சர்க்கரை - 200 கிராம்

நெய் - 2 ஸ்பூன்

தேங்காய் - 1/2 மூடி

ஏலக்காய் - 2

பட்டை - 2

கிராம்பு - 2

செய்முறை:

தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

பலாச்சுளைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் பாலில் போட்டு ஊறவிடவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும், ஏலம், பட்டை, கிராம்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து அதில் தேங்காய்ப் பால் பலாச்சுளைகளை போட்டு மூடி வைத்து வேகவிடவும்.

பால் வற்றி பலாச்சுளை வெந்ததும் சீனியைப் போட்டுக் கிண்டவும்.

நன்கு கொழ கொழப்பாகி கெட்டியானதும் இறக்கிவிடவும். சுவையான பலாச்சுளைப் பச்சடி தயார்.

குறிப்புகள்: