பர்மா நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கட்
வெங்காயம் - ஒரு கப் நீளமாக அரிந்தது
பூண்டு - ஐந்து பல் பொடியாக அரிந்தது
சிவப்பு மிளகாய் -ஐந்து
எண்ணெய் - இரண்டு மே.க்
பொட்டுகடலை மாவு -ஒரு மே. க
பச்சை கொத்தமல்லி இலை- பொடியாக அரிந்தது ஒர் மே.க
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
முதலில் நூடுல்சை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வேகவைத்து வடிகட்டி பச்சை தண்ணீல அலசி மீண்டும் வடிகட்டி ஒரு ஸ்பூன் எண்ணெய் தடவி வைக்கவும்
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் மீதி எண்ணெயை ஊற்றி அதில் அரிந்த பூண்டை போட்டு சிவப்பாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்
அடுதததாக வெங்காயத்தை போட்டு சிவப்பாக பொரித்து எடுத்து வைக்கவும்
மிளகாயை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து,ஆறியதும், மிக்ஸியில் இட்டு பொடியாக்கி கொள்ளவும். இதோடு அடுப்பை ஆப் செய்து விடவும்
ஒரு அகலமான பேஸன் போன்ற் பாத்திரத்தை எடுத்து முதலில் நூடுல்சை போடவும்.
அடுத்ததாக, பொரித்த பூண்டு,வெங்காயம்,காரத்திற்கு தேவையான மிளகாய் பொடி, உப்பு, பொட்டுகடலை பொடி,ஆகியவற்றை போட்டு பொரித்த எண்ணெயில் ஊற்றி முள் கரண்டி கொண்டு நன்றக கிளறவும்.
பறிமாறும் போது தட்டில் நூடுல்ஸ் கலவையை வைத்து மேலாக பச்சை வெங்காயம்,ப.கொத்தமல்லி தூவி பறிமாறவும்
இதனுடன் வாழைத்தண்டு சூப் நன்றாக இருக்கும்.