நுரையீரல் சால்னா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு நுரையீரல் - ஒன்று

வெங்காயம் - மூன்று

தக்காளி - ஐந்து

மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி

தனியா தூள் - நான்கு தேக்கரண்டி

பச்சைமிளகாய் - மூன்று

உப்பு - தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

டால்டா - ஒரு தேக்கரண்டி

பட்டை - இரண்டு பெரிய துண்டு

கிராம்பு - மூன்று

ஏலம் - ஒன்று

வெங்காயம் - அரை பாகம்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - அரை கட்டு

புதினா - கால் கட்டு

தேங்காய் - ஒரு சிறிய மூடி

கத்திரிக்காய் - அரை கிலோ

செய்முறை:

நுரையீரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் மூன்று தேக்கரண்டி வெங்காயம், தக்காளி நீளமாக நறுக்கி போட்டு விரவி வைக்கவும்.

சட்டியில் எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் அரை வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி புதினா போட்டு தாளித்து விரவி வைத்துள்ள நுரையீரல் மசாலாவைபோட்டு கிளறி ஐந்து நிமிடம் வதக்கி குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயை அரைத்து ஊற்றி இறக்கவும்.

குறிப்புகள்: