தேங்காய் மிளகுக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் -அரைக்கிலோ

தேங்காய்-கால் மூடி (பொடியாக நறுக்கவும்)

மிளகு -1ஸ்பூன் (மிக்ஸியில் கரகரப்பாக பொடித்தது)

தக்காளி-1

பட்ட மிளகாய்-2

வெங்காயம்-1

சின்ன வெங்காயம்-5 (அரைக்கவும்)

இஞ்சி,பூடு பேஸ்ட்-1 ஸ்பூன்

மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்

பட்டை-1

ஏலக்காய்-2

கிராம்பு-3

உப்பு-தேவைக்கு

எண்ணெய்-தாளிக்க தகுந்த அளவு

செய்முறை:

எண்ணெயில் பட்டை,ஏலக்காய்,கிராம்பு போட்டு முறியவிடவும்.

அத்துடன் பட்ட மிளகாய்,தேங்காய்,வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின் இஞ்சி,பூடு விழுது,

அரைத்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசனை போன பின் தக்காளி,மஞ்சள் தூள், மிளகு தூளில் பாதி சேர்க்கவும்.

எல்லாம் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது கறியை சேர்த்து வதக்கவும்.

சிறிது தண்ணீர் தெளித்து குக்கரை மூடவும்.

4 விசில் வந்ததும் 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.

அதன் பின் மூடியை திறந்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும். முழுவதும் வற்றும் முன்பே மீதமுள்ள மிளகையும் சேர்த்து கிளறிவிட்டு பின் இறக்கவும்.

குறிப்புகள்: