தேங்காய் புதினா சட்னி
0
தேவையான பொருட்கள்:
புதினா - 50 கிராம்
தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2-3
புளி - புளிக்கொட்டை அளவு
உப்பு - தேவைக்கு
புளிக்காத கட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
செய்முறை:
புதினாவை ஆய்ந்து கழுவி எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எள்ளு போட்டு வெடிக்க விட்டு, மிளகாய், புதினா, தேங்காய், உப்பு, புளி சேர்த்து சிறிது நேரம் குறைந்த தீயில் வதக்கவும்.
வதக்கியதை மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்,விருப்பப்பட்டால் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்.