தந்தூரி லேம்ப் சாப்ஸ்
தேவையான பொருட்கள்:
லேம்ப் சாப்ஸ் துண்டு - 8
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
கெட்டித்தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
சிவப்பு கலர் - அரை பின்ச் (விருப்பப்பட்டால்)
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன
லைம் ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன்
டொமேட்டோ பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
சாப்ஸ் துண்டுகளை அலசி நீர் நன்றாக வடிகட்டிக்கொள்ளவும்.
ஒரு பவுளில் தயிர், தக்காளி பேஸ்ட், மல்லித்தூள், சில்லிபவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், கலர், எண்ணெய், உப்பு, லைம் ஜூஸ் சேர்த்து மிக்ஸ் செய்து சாப்ஸ் துண்டுகளில் தடவி ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
கேஸ் அவனில் 250 டிகிரியில் முற்சூடு செய்து, ஒவன் ப்ரூஃப் ட்ரேயில் எண்ணெய் தடவி சாப்ஸ் வைத்து 180 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவும். வெந்து விட்டதா என்று பார்த்து பரிமாறவும்.
இதனை லெட்டியூஸ் இலைகளுடன் லைம், ஆனியன் கட் செய்து அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான தந்தூரி லேம்ப் சாப்ஸ் ரெடி.