தக்காளி வித் பேரீச்சை ஹல்வா
தேவையான பொருட்கள்:
தக்காளி - 500 கிராம்
சர்க்கரை - 300 கிராம்
பால் கோவா - 100 கிராம்
பேரீச்சை பழம் - 100 கிராம்
நெய் - 150 கிராம்
ஏலக்காய் - 3
பாதாம் பருப்பு - 50 கிராம் (ஒன்றும் பாதியுமாக பொடித்தது)
உப்பு - ஒரு பின்ச்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
கிஸ்மிஸ் பழம் - 25 கிராம்
கோதுமை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் தக்காளியை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூன்று விசில் வைத்து வேக விடவும்..
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கவும்.
வேக வைத்த தக்காளி ஆறியதும் தோலை எடுத்து விட்டு பழத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த தக்காளியில் ஏலக்காய்,உப்பு, 50 கிராம் நெய்,பொடியாக நறுக்கிய பேரீச்சை பழம் அனைத்தையும் போட்டு வேகவிடவும். ஒரு பத்து நிமிடம் வெந்தால் போதுமானது. பிறகு பொடித்து வைத்துள்ள பாதாம் பருப்பு மற்றும் சர்க்கரையை போடவும்.
சர்க்கரையை போட்டதும் தண்ணீர் போல் ஆகிவிடும்.
நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். பிறகு பால் கோவாவை போட்டு இடை இடையில் நெய் ஊற்றி கிளறவும்.
தண்ணீர் வற்றவில்லையென்றால் கோதுமை மாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து ஊற்றவேண்டும். கிளறும் போது ஹல்வா போல் கட்டியாகிவிடும்.
கடைசியில் மீதி உள்ள நெய்யில் முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ் பழங்களை வறுத்து கொட்டவேண்டும்.