தக்காளி முட்டை ஆம்லேட்
0
தேவையான பொருட்கள்:
முட்டை - இரண்டு
பெரிய தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு மூன்று பொடியாக அரிந்தது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முட்டையை நல்ல அடித்து அதில் தக்காளியை பொடியாக நறுக்கி, மேற்கண்ட மற்ற பொருட்களையும் போட்டு கலக்கி தோசை தவாவில் எண்ணெய் கொஞ்சம் டால்டா ஊற்றி கலக்கிய முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் கருகாமல் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.