தக்காளி தால்
தேவையான பொருட்கள்:
பருப்பில் வேகவைக்க:
துவரம் பருப்பு - ஒரு கப்
தக்காளி - இரண்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - நான்கு
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - இரண்டு (நான்காக நறுக்கவும்)
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
டால்டா - இரண்டு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - மூன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - அரை கை பிடி
கொத்தமல்லி தழை - கொஞ்சம்
செய்முறை:
பருப்பை களைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
அதில் வேக வைக்கவேண்டியவைகளை போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
வெந்ததும் தேவைக்கு தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் (அ) ப்ளென்டரில் அடித்து உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்து நுரைத்து வரும் போது இறக்கி தாளிக்க வேன்டியவைகளை போட்டு தாளித்து இறக்கவும்.
இதற்கு வெங்காய முட்டை, அப்பளம், ஊறுகாய் சூப்பராக இருக்கும்.