டபுள் கா மீட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரெட்- 5

பால்- 1லிட்டர்

சீனி- 1/4 கிலோ

நெய்- 1/4லிட்டர்

நறுக்கிய முந்திரி- 50கிராம்

ஊறவைத்த நறுக்கிய பாதாம்- 50கிராம்

குங்குமப்பூ- 1சிட்டிகை

ஏலக்காய்- 5

செய்முறை:

பிரெட் ஓரங்களை நறுக்கி விட்டு நான்காக நறுக்கி வைக்கவும்

வாணலியில் நெய் ஊற்றி பிரெட்டை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும் முந்திரி, பாதாமயும் வறுத்தேடுக்கவும்.

பால் காய்ந்தவுடன் சீனி போட்டு சுண்ட காய்ச்சவும்.

ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பாதாம், குங்குமப்பூ போட்டு 5 நிமிடம் காய்ச்சி திக்கான பின்பு இறக்கவும்.

ஒரு தட்டில் வறுத்த பிரெட் துண்டுகளை வைத்து அதன் மேலே காய்ச்சிய பாலை ஊற்றி ஆறிய பிறகு பிரிஜில் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: