சேனைகிழங்கு சாப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - அரை கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 1

மிளகாய் வற்றல் - 3- 4

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 4 பல்

பட்டை- சிறிய துண்டு

கிராம்பு - 1

சோம்பு - அரை ஸ்பூன்

தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

மல்லி, கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் தோலை பெரிய கத்திக்கொண்டு சீவிக்கொள்ளவேண்டும். சதுர துண்டுகளாய் போட்டு அரிசிக்கழனியில் போட்டு வைக்கவும். பின்பு தண்ணீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.

பட்டை, சோம்பு, கிராம்பு, வற்றல் வறுத்து தூள் செய்யவும். பின்பு அத்துடன், தேங்காய், இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

சேனைக்கிழங்கில் பிசறி இட்லி பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வேக வைத்த மசாலாவுடன் கூடிய சேனைகிழங்கை சேர்க்கவும்.

பிரட்டி பிரட்டி முறுக வைக்கவும். மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான சேனை சாப்ஸ் ரெடி.

குறிப்புகள்: