சுக்கு மிளகு டீ

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் - ஒன்றரை டம்ளர்

தண்ணீர் - இரண்டு டம்ளர்

டீ தூள் - ஒன்றரை தேக்கரண்டி

சர்க்கரை - ஆறு தேக்கரண்டி

சுக்கு மிளகு பொடி - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

பாலை தனியாக காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும்.

தண்ணீரில் சுக்கு, மிளகு பொடி, சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு பிறகு டீ தூளை சேர்க்கவும்.

நன்கு கொதித்து சாறு இறங்கியதும் வடிகட்டி பாலை சேர்த்து குடிக்க வேண்டும்.

குறிப்புகள்: