சீலா மீன் சால்னா (king fish)
தேவையான பொருட்கள்:
சீலா மீன் - அரைக்கிலோ
தாளிக்க:
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
பூண்டு - ஐந்து பல் (தட்டிக்கொள்ள வேண்டியது)
வெங்காயம் - அரை பாகம்
கறிவேப்பிலை - ஒரு கொத்து (இரண்டாக கிள்ளி வைக்கவும்)
அரைக்க:
வெங்காயம் - ஒன்றரை
தக்காளி - மூன்று
புளி - இரு லெமென் சைஸ் (கரைத்துக்கொள்ளவும்)
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - நான்கு பத்தை (அரைத்துக்கொள்ளவும்)
கொத்தமல்லித்தழை - மேலே தூவ
செய்முறை:
மீனை சுத்தமாக உப்பு ஒரு சொட்டு வினிகர் போட்டு ஊறவைத்து கழுவி தனியாக வைக்கவும். கழுவுகிறேன் என்று பினைந்து கழுவவேண்டாம். தூள் தூளாகிவிடும்.
எண்ணெயை காய வைத்து கடுகு, வெந்தயம், சீரகம் போட்டு வெடித்ததும் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி கறிவேப்பிலையை போட்டு வெங்காயம் தக்காளி இரண்டையும் மிக்ஸியில் நன்றாக அரைத்து ஊற்றவும்.
ஊற்றி ஒரு கொதி வந்ததும் மசாலாத்தூள் வகைகள் அனைத்தையும் போடவும்.
போட்டு நல்ல மசாலா வாசனை அடங்கியதும் புளியை கரைத்து ஊற்றவும்.
புளி பச்சைவாசனை போனதும் தேங்காயை ஊற்றி இரண்டு மூன்று நிமிடம் கழித்து மீனை போடவும். மீன் இரண்டு மூன்று நிமிடத்தில் வெந்து விடும்.
ஆகையால் கடைசியில் போட்டு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
மீன் சால்னா தயார்.