சிக்கன் பஜ்ஜி 1

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஊற வைக்க:

எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - கால் கிலோ (ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கிக் பண்ணிக்கொள்ளவும்)

இஞ்சி பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

வெள்ளை மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

தனியாத் தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

உப்பு - 1/4 டீஸ்பூன்

போண்டா மாவு கரைத்து கொள்ள:

முட்டை - 1

கடலை மாவு - மூன்று மேசைக்கரண்டி

மைதா - மூன்று மேசைக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

சிக்கனில் ஊறவைக்க வேண்டிய பொருட்களை போட்டு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

போண்டா மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, கெட்டியாக கொஞ்சம் தளர கரைத்து கொள்ளவும்.

பிறகு ஊற வைத்த சிக்கனை அதில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

புதினா சட்னி (அ) தக்காளி சாஸ் இதனுடன் தொட்டு சாப்பிடவும்.

குறிப்புகள்: