சிக்கன் தர்பாரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - அரைக் கிலோ

தக்காளி - 2

கொண்டைக்கடலை - 100 கிராம்

முந்திரி - 10

தேங்காய் - ஒரு மூடி

புளி - நெல்லிக்காய் அளவு

இஞ்சி - ஒரு துண்டு

மலைப் பூண்டு - 5

காய்ந்த மிளகாய் - 4

கிராம்பு - 4

பட்டை - 2 அங்குலத் துண்டு

ஏலக்காய் - 6

மல்லி - ஒரு மேசைக்கரண்டி

கசகசா - அரை மேசைக்கரண்டி

நெய் - 3 மேசைக்கரண்டி

வெங்காயம் - 2 (சிறியது)

மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிதமான சூட்டிலுள்ள வெந்நீரில் புளியைக் கரைத்து வடிகட்டி, ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசலை எடுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி ஒரு கப் அளவிற்கு பால் எடுத்து வைக்கவும். கோழியைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கி எடுத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டினை தோலுரித்து காய்ந்த மிளகாயுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முந்திரியைத் தனியாக அரைத்து வைக்கவும். கிராம்பு, பட்டை, ஏலக்காய், மல்லி, கசகசா ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

கொண்டைக்கடலையை 3 அல்லது 4 மணி நேரம் ஊற வைத்து, பிறகு வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் நெய் விட்டு சூடேறியதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

பிறகு கோழித் துண்டுகளைச் சேர்த்து, குறைந்த தீயில் வைத்து கோழியில் உள்ள நீர் வற்றும் வரை வேகவிடவும்.

அதனுடன் தக்காளி மற்றும் பொடி செய்து வைத்துள்ள கிராம்பு, ஏலக்காய், மல்லி மசாலாவைச் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, தீயை சற்று அதிகப்படுத்தி வேகவிடவும்.

மசாலா தக்காளியுடன் நன்கு கலந்து, சிக்கன் வெந்ததும் மசித்து வைத்துள்ள கொண்டைக்கடலை, முந்திரி விழுது மற்றும் தேங்காய் பால் ஆகியவற்றைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் வேகவிடவும்.

இறுதியாக புளிக் கரைசலை ஊற்றி, குழம்பு நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். சுவையான சிக்கன் தர்பாரி தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: