சாப்ரான் பால் (சளிக்கு)
0
தேவையான பொருட்கள்:
பால் - ஐந்து கப்
சர்க்கரை - அரை கப்
சாஃப்ரான் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய் - நான்கு (பவுடராக்கி கொள்ளவும்)
பாதாம், பிஸ்தா - ஆறு
செய்முறை:
பாதம், பிஸ்தா ஊற வைத்து தோலெடுத்து பொடியாக நறுக்கவும்.
பாலை நல்ல காய்ச்சவும் கொஞ்சம் வத்த விடுங்கள்.
இப்போது ஏலக்காய் பவுடர், சாஃப்ரான், சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சி நறுக்கின பாதம், பிஸ்தாவை போட்டு சூடாக குடிக்கவும்.