க்ரில் சாப்ஸ்
0
தேவையான பொருட்கள்:
மட்டன் சாப்ஸ் - ஒரு கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 4 கரண்டி
மிளகாய்தூள் - 3 கரண்டி
கரம் மசாலாத்தூள் - 2 கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
வினிகர் - 2 கரண்டி
உப்பு - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைப்பழம் - ஒன்று
செய்முறை:
கறியை சுத்தம் செய்து அதில் அனைத்து பொருள்களையும் சேர்த்து கலக்கி இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
அவனை 280° F அளவுக்கு சூடாக்கவும்
ஒரு அலுமினிய தட்டில் சிறிது வெண்ணெய் தடவி அதில் கறியை வைத்து அவனில் வைக்கவும்.
இடையிடையில் திருப்பிப்போடவும் 45 நிமிடம் கழித்து வெந்ததும் எடுக்கவும்.