கோழி ஈரல் டீப் பிரை
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோழி ஈரல் - 100 கிராம்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - கால் தேக்கரண்டி
தக்காளி - பாதி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று சிறிது
எண்ணெய் + நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
கோழி ஈரலை சுத்தப்படுத்தி தண்ணீரை வடிக்கவும்.
தக்காளியை நன்கு பிழிந்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தூள் போட்டு பிரட்டி வைக்க வேண்டும்.
ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய் + நெய் ஊற்றி சில பட்டை போட்டு சூடு வந்ததும் கலக்கி வைத்துள்ள கலவையை போட்டு வறுத்து எடுக்கவும்.
இது சீக்கிரம் வெந்து விடும்.