கோழிகால் சாப்ஸ்
0
தேவையான பொருட்கள்:
கோழி கால்- 6
நறுக்கிய வெங்காயம்- 2
நறுக்கிய தக்காளி- 2
இஞ்சி பூண்டு விழுது- 2ஸ்பூன்
தயிர்- 1/4கப்
மஞ்சாள்த்தூள்- 1ஸ்பூன்
இரண்டாக கீறிய ப.மிளகாய் - 2
கறிவேப்பிலை- கொஞ்சம்
கரம் மசால- 1ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 2ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
சிக்கன் காலுடன் மஞ்சள்த்தூள், உப்பு போட்டு விரவி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தயிர்,க.பிலை, கரம்மசாலத்தூள் போட்டு தாளிக்கவும்.
சிக்கன் காலை சேர்க்கவும்.
தக்காளி,மிளகாய்த்தூள், கொஞ்சம் உப்பு, 1டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
குறைந்த தணலில் 20 நிமிடம் வைத்து வதக்கவும். நன்றாக கொதி வரும் போது கொ.மல்லி தூவி இறக்கவும்.