கீரை பொரிமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை - 4 கப்

பசலைக்கீரை - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - 2

தேங்காய் துருவல் - அரை கப்

இறால் - 10

கத்தரிக்காய் - ஒன்று

உப்பு - ஒரு சிறிய ஸ்பூன்

பொரிமாத்தூள் செய்ய :

பச்சை அரிசி - கால் கப்

பெருஞ்சீரகம் - ஒரு ஸ்பூன்

செய்முறை:

அரிசியை தீயாமல் வறுத்து, அத்துடன் பெருஞ்சீரகத்தையும் வறுத்து, ஆறியவுடன் சற்று நைசான ரவா பதத்தில் மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாயையும், பாதி வெங்காயத்தையும் நசுக்கிக்கொள்ளவும். தேங்காய் துருவலையும் நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் மீதி வெங்காயம், பொடியாக நறுக்கிய கத்தரிக்காய், இறால், உப்பு போட்டு வேகவைத்து, கழுவிய கீரை, நசுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பொரிமாத்தூள் போட்டு நன்றாக மசிக்கவும்.

கீரை வெந்து, நன்றாக மசிந்து குழைவாக ஆனவுடன் இறக்கி சூடாக பரிமாறலாம்.

இதை தனியாகவோ அல்லது பக்க உணவாகவோ சாப்பிடலாம்.

குறிப்புகள்: