கிரீன் மசாலா (BBQ)

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் - ஒரு கிலோ

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை மேசைக்கரண்டி

தயிர் - நான்கு மேசைக்கரண்டி

உப்பு - தேவைக்கு

பச்சை மிளகாய் - ஆறு

மிளகு - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - அரை கட்டு

புதினா - கால் கட்டு

கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - நான்கு மேசைக்கரண்டி

லெமென் ஜூஸ் - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

மட்டனை கழுவி சுத்தம் செய்து மீடியமான அளவில் துண்டுகள் போடவும்.

அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.

மிளகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை அரைத்து மட்டனில் கலக்கவும்.

ஒரு மணிநேரம் ஊறிய பிறகு ஆலிவ் ஆயிலை சேர்க்கவும். ப்ரிட்ஜில் ஊற வைத்து மறுநாள் BBQ கம்பியில் ஒவ்வொன்றாக கோர்த்து சுட்டு சாப்பிடவும்.

குறிப்புகள்: